ரூ.510 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஒயின் ஷாப் – வியப்பில் மாநில அரசு!!

0

ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கம் போல் ஒயின் ஷாப் ஏலத்தில் விடப்பட்டது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் ஓர் ஒயின் ஷாப் சுமார் ரூ.510 கோடிக்கு ஏலத்தில் போனது. மாநில அரசு எதிர்பார்த்ததை விட அதிக தொகைக்கு இந்த கடை விலைக்கு சென்றுள்ளது.

ராஜஸ்தான்:

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் அரசுக்கு கீழ் தான் இயங்கி வருகிறது. ஆனால் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் மதுபான கடைகள் தனியார் வசம் தான் உள்ளது. மேலும் அதனை மாநில அரசு தனியாரிடம் ஏலத்தில் விற்று வரும். தற்போது அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓர் ஒயின் ஷாப்பை ஏலத்தில் விட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் அது யாரும் எதிர்பாராத வகையில் அதிக விலைக்கு ஏலத்தில் சென்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 7,665 மதுபான கடைகள் உள்ளது.இவை அனைத்தும் இ ஏல முறையில் வழங்கப்படும். தற்போது அந்த வகையில் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமத்தில் இயங்கி வரும் ஓர் ஒயின்ஷாப்பை நேற்று ஏலத்திற்கு வந்தது. இதனை பல்வேறு தரப்பினர் மிக ஆர்வத்துடன் ஏலம் எடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த ஏலம் நேற்று இரவு வரை நீடித்தது.

முல்லை அம்மாவின் இதய நோய் பற்றி உளறிவிடும் மீனா – அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

எவரும் எதிர்பார்க்காத வகையில் இந்த ஒயின் ஷாப் ரூ.510 கோடிக்கு ஏலத்தில் விலை போனது. இது மாநில அரசு எதிர்பார்த்ததை விட 708 மடங்கு அதிகமாக சென்றுள்ளது. இதனை அந்த பகுதியை சேர்ந்த கிரண் கவர் என்ற பெண்ணுடன் சேர்ந்து மற்றொரு பெண் இதனை ஏலத்தில் எடுத்துள்ளார். இந்த தகவலினால் தற்போது அனைவரும் வியந்து போய் உள்ளனர். மேலும் எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு சென்றதால் மாநில அரசு வியப்பில் ஆழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here