புடவையில் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த அனிகா – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0

நடிகை அனிகாவின் சமீபத்திய புடவை போட்டோ ஷூட் தற்போது வெளியாகியுள்ளது. நீல நிற புடவையில் அழகாக ஜொலிக்கும் நடிகை அனிகாவின் புகைப்படங்கள் வலைதளத்தில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

நடிகை அனிகா

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. குழந்தை நட்சத்திரமாக பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ‘என்னை அறிந்தால்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்துள்ள அனிகா தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியுடன் ‘மிருதன்’ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். நடிகை நயன்தாராவின் ஜாடையில் அனிகாவின் முகம் இருப்பதால் ரசிகர்கள் இவரை செல்லமாக குட்டி நயன்தாரா என்று அழைப்பார்கள்.

குழந்தையாக நடித்தது போதும் என்ற எண்ணத்தில், திரையுலகில் நடிகையாக கதாநாயகர்களுடன் ஜோடி போட வேண்டும், டூயட் பாட வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார் அனிகா. அதற்கான வேலைகளிலும் தற்போது ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் அனிகா.

விருது வழங்கும் விழாவில் புகழை கட்டிப்பிடித்து அழுத அஸ்வின் – வைரலாகும் புகைப்படம்!!

தற்போது இளம் வயதை எட்டியிருக்கும் அனிகா, விதவிதமாக புகைப்படங்களை எடுத்து அதை வலைதளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். வித்தியாசமான உடைகளில் அழகழகாக போஸ் கொடுத்து அனிகா வெளியிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாவதுண்டு.

அதே சமயத்தில் இவர் வெளியிடும் சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறுவதும் உண்டு. எப்படி இருந்தாலும் புகைப்படம் எடுக்கும் வழக்கத்தை மாற்றவில்லை அனிகா. நீல நிற புடவையில் மஞ்சள் நிற ஜாக்கெட் உடுத்தி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here