தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களின் பட்டியல் – மார்ச் 10இல் வெளியீடு!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை மிக தீவிரமாக செய்து வருகின்றார். மேலும் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர்கள் தெரிவித்தனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போது திமுக கட்சி தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடமும் நேர்காணலை நடத்தியும் வருகிறது. இந்த நேர்காணல் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் இன்று திமுக மாவட்ட பொதுச்செயலாளர்களுக்கு அவசர ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

#INDvsENG 4வது டெஸ்ட் – புஜாரா, கோஹ்லி ஏமாற்றம்!இந்தியாவிற்கு 3 விக்கெட் காலி!!

இந்த கூட்டம் காலை 9 மணி அளவில் தொடங்கியது. மேலும் இந்த கூட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதில் திமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வருகிற 10ம் தேதி அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here