‘இனி லேப்டாபில் வீடியோ கால் செய்துகொள்ளலாம்’ – வாட்ஸ் ஆப் நியூ அப்டேட்!!

0

வாட்ஸ் ஆப் செயலி தற்போது தனது செயலியில் புது அப்டேட் ஒன்றை செய்துள்ளது. அதன்படி இனி பயனாளர்கள் கணினி மற்றும் லேப்டாபில் அழைப்பு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்:

வாட்ஸ் ஆப் செயலி பயனாளர்களிடம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த செயலி பயனாளர்களின் தேவைக்கேற்ப பல அம்சங்களை படைத்தது வருகிறது. மேலும் அந்த அம்சம் அனைத்து பயனாளர்களை கவரும் வகையில் இருந்து வருகிறது. இதனாலேயே பயனாளர்கள் இந்த செயலி மீது அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர். இதுவரை இந்த செயலியை வைத்து போன் மூலம் மட்டுமே ஆடியோ மற்றும் வீடியோ கால் அழைப்பு செய்யும் வசதி இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த செயலியின் வெப் பயன்படுத்தி கணினி மற்றும் லேப்டாபில் தகவல் மட்டும் பரிமாறும் அம்சத்தை பெற்று வந்தது. தற்போது வாட்ஸ் ஆப் செயலி பயனாளர்களுக்கு பயன்படும் வகையில் புது அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனாளர்களை கவரும் வண்ணத்தில் உள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் விவோ S9 5g மற்றும் S9e 5g?? சிறப்பம்சங்கள் வெளியீடு!!

அது என்னவென்றால், இதுவரை போனில் மட்டுமே ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசி வந்த பயனாளர்கள் இனி கணினி மற்றும் லேப்டாப் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் படு குஷி அடைந்துள்ளனர். மேலும் விரைவில் குழு உறையாடல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here