உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை – வைரலாகும் அதிர்ச்சி தகவல்!!

0
நாட்டில் மக்கள் இனி மாஸ்க் அணிய தேவையில்லை - அரசு அதிரடி உத்தரவு!!
நாட்டில் மக்கள் இனி மாஸ்க் அணிய தேவையில்லை - அரசு அதிரடி உத்தரவு!!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.62 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டுமாக கொரோனா தொற்று பாதிப்பு வேகமெடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை இன்னல்களுக்குள்ளாக்கியது. எதிர்பாராத அளவு வேகமெடுத்த கொரோனா பரவல் பல்வேறு வல்லரசு நாடுகளை தாக்கியத்தில் அந்நாடுகள் நிலை குலைந்துபோனது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதில் பாதியளவு மட்டுமே தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இன்று வரை நோயின் தாக்கம் குறைந்தபாடில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்றைய நிலைப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,62,16,580 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25,81,649 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,18,84,249 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையில் 2,17,50,682 பேர் உள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,95,26,086 கோடியை தாண்டியுள்ளது.

கத்தார் ஓபன் டென்னிஸ் – அரை இறுதிக்கு முன்னேறிய சானியா ஜோடி!!

பலி எண்ணிக்கையும் 5 லட்சத்து 33 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மட்டுமே ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,307 ஆக உள்ள நிலையில் பலி எண்ணிகை 1,993 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 1,11,73,671 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,57,548 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது. இதுவரை பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,07,96,506 ஆக உள்ளது. ஒரே நாளில் 74,285 பேருக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்று பாதிப்பில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,61,188 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here