IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி டெல்லி.., பலம் வாய்ந்த ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0
IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி டெல்லி.., பலம் வாய்ந்த ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 20) அருண் ஜெட்லி மைதானத்தில் 35 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க டெல்லி அணி முழு வீச்சுடன் தயாராகி வருகிறது.
அதே போல தொடர் வெற்றியில் உள்ள ஹைதராபாத் மும்பை அணி, இந்த முறை 5 வது வெற்றியை அடைய வேண்டும் என தயாராகி வருகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 23 முறை மோதியுள்ள நிலையில், அதில் ஹைதராபாத் அணி 12 முறை வெற்றி அடைந்து இருக்கிறது. அதனால் இந்த முறை ஹைதராபாத் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here