பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது – விவசாய போராட்ட ‘டூல் கிட்’ பகிர்ந்த வழக்கு!!

0

டில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பான ‘டூல் கிட்’ வாசகத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்ததாக கூறி பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டங்களை தெரிவித்துள்ளன.

சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவி

டெல்லியில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணியில் கலவரம் உண்டானது. இதைத்தொடர்ந்து உலக பிரபலங்கள் பலரும் விவசாயிகளுக்கான தங்களது ஆதரவை சமூகவலைதளம் மூலம் கொடுத்து வந்தனர். குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு இந்தியாவில் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் விவசாய போராட்டத்திற்கு சமூகவலைதளத்தில் வெளியான ‘டூல் கிட்’ ஆதாரமாக உள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘டூல் கிட்’ என்பது விவசாயப்போராட்டத்தில் மக்கள் தங்களது ஆதரவை தெரிவிக்க தேவையான செய்திகள் அடங்கிய தொகுப்பு ஆகும். இந்த ‘டூல் கிட்’டை சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் பயன்படுத்தியதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரேட்டா தன்பெர்க்கின் பதிவை பெங்களூரைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவி ட்விட்டரில் பகிர்ந்துள்ளதாக கூறி, தேச துரோகம் உள்ளிட சில வழக்குகளின் கீழ் அவரை கைது செய்துள்ளனர் டெல்லி போலீசார். கல்லூரியில் பயின்றுவரும் 25 வயதான திஷா, ‘friday for future’ என்ற போராட்ட குழுவில் உறுப்பினராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்ற தேர்தல் – முதலவர் 6ம் கட்ட பிரச்சாரம் துவக்கம்!!

கைது செய்யப்பட்ட நிஷாவை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். கிரேட்டா தன்பெர்க்கின் பதிவில் இரண்டு வார்த்தைகளை மட்டுமே திருத்தி பயன்படுத்தியதாக திஷா கூறியுள்ளார். இதையடுத்து திஷாவை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் திஷா ரவியின் கைது குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ப.சிதம்பரம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டங்களை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here