அஷ்வினுக்கு நடராஜன் வைத்த பெயர் – ட்ரெண்ட் ஆக்கும் ரசிகர்கள்!!

0

தமிழக பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் நடராஜன் இந்திய அணியில் முக்கிய வீரர்களாக திகழ்கின்றனர். தற்போது நடராஜன் அஷ்வினை அழைக்கும் விதம் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

நடராஜன்:

ஆஸ்திரேலிய தொடர் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானவர் தான் தமிழக வீரர் நடராஜன். இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் தனக்கு கொடுத்த வாய்ப்பை மிக அருமையாக பயன்படுத்தினார். மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இவரும் ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் போட்டியின் போதும் மற்றும் தனது யூ டியூப் சேனலில் அஸ்வின் நடராஜனை பேட்டி எடுத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது நடராஜன் அஷ்வினை ‘அண்ணா அண்ணா’ என்று தான் அழைத்தார். என்ன கேள்வி கேட்டாலும் அல்லது பதில் சொன்னாலும் அஷ்வினை அண்ணா என்று அழைத்து தான் நடராஜன் பேசினார். தற்போது இதனை அஷ்வின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசி வரும் அஷ்வினை, ‘அஷ் அண்ணா’ என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – முதலவர் 6ம் கட்ட பிரச்சாரம் துவக்கம்!!

மேலும் நேற்று ‘அஷ் அண்ணா’ என்ற வார்த்தை இவரது ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. தற்போது அஷ்வினை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள்; ‘அஷ் அண்ணா’ என்று தான் அழைத்து வருகிறார்கள். இது அஷ்வினுக்கு புது பெயராகவே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here