தமிழக சட்டமன்ற தேர்தல் – முதல்வர் 6ம் கட்ட பிரச்சாரம் துவக்கம்!!

0

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சர் தனது 6ம் கட்ட பிரச்சாரத்தை துவக்க உள்ளார். தற்போது அதற்கான தேதி மற்றும் இடங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரம் மற்றும் கூட்டணி கட்சி முடிவுகள் என பிசியாக இருந்து வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகளும் தேர்தலை நடத்துவதற்கு மிக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சில தினங்களுக்கு முன்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர்கள் தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கும் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்கும் சென்னை வந்தனர். மேலும் தமிழகத்தில் தேர்தல் எப்போது என்பது குறித்த தகவலை டெல்லி சென்ற பின்பு தான் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். தற்போது தேர்தலுக்காக தமிழக முதலமைச்சர் தனது கட்சி சார்பாக பிரச்சாரத்தை துவக்கி நடத்தி வருகிறார்.

நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்!!

இதுவரை அவர் 5 கட்டமாக பிரச்சாரத்தை நடத்தியுள்ளார். தற்போது அவரின் 6ம் கட்ட பிரச்சாரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இவரின் 6ம் கட்ட பிரச்சாரம் வருகின்ற 17, 18 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கவுள்ளது. வரும் 17ம் தேதி தூத்துக்குடி, 18ம் தேதி நெல்லை மற்றும் தென்காசி பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதனால் அந்த பகுதியில் உள்ள தொண்டர்கள் ஆர்வமுடன் காத்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here