Home பொழுதுபோக்கு சினிமா நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்!!

நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்!!

0
நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்!!
Actress Nidhi Agarwal Hot Black Saree Images @ iSmart Shankar Pre Release

நேற்று காதலர் தினத்தை ஒட்டி தமிழகத்தில் நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி பாலபிஷேகம் செய்துள்ளனர் அவரது ரசிகர்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்

தமிழ் மக்களுக்கு பொதுவாக சினிமா மீது தீராத காதல் உண்டு. குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை எப்போதும் சலிக்காமல் செய்யும் ஒரே விஷயம் திரைப்படங்கள் பார்ப்பது தான். மற்ற ரசிகர்களை போலல்லாது, தமிழ் ரசிகர்கள் சினிமா ஆர்வத்தில் எப்போதும் ஒரு படி மேலே தான் இருப்பார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் தமிழ் திரையுலகில் உள்ள ஒவ்வொரு கதாநாயகர்களுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. நடிகர்கள் மட்டுமல்லாது நடிகைகளுக்கும் அதே போல வெறித்தனமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில், நடிகை நிதி அகர்வாலுக்கு அவரது ரசிகர்கள் கோவில் கட்டி பாலபிஷேகம் செய்துள்ளனர்.

மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி – மக்கள் அதிர்ச்சி!!

தெலுங்கு பட உலகை சேர்ந்த நடிகை நிதி அகர்வால் ஜெயம்ரவி நடித்த ‘பூமி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் பொங்கல் தினத்தன்று வெளியானது. தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகை நிதி அகர்வாலுக்கு நேற்று காதலர் தினத்தை ஒட்டி அவருக்கு கோவில் கட்டி பாலபிஷேகம் செய்துள்ளனர் அவரது ரசிகர்கள். இதுகுறித்து நிதி அகர்வால் கூறும் போது, ‘இதை நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இதைவிட சிறந்த காதலர் தின பரிசு இருக்காது. ரசிகர்களின் அன்புக்கு மிக்க நன்றி’ என கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here