பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் – ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!!

0

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரி தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் ஆசிரியர் சங்கம் சார்பில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை

தற்பொழுது உள்ள சூழலில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூறி ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்பரசு, செயலாளர் செந்தில் நாதன், துணைத்தலைவர் சுந்தர மூர்த்தி ஆகியோர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த மனுவில், ‘வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பணி உயர்வு மற்றும் பணி ஓய்வு ஆகியவை சரியாக பெறமுடியாத நிலையில், பள்ளிக் கல்வித்துறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்வதற்கு, பரிந்துரை செய்ததற்காக நன்றி தெரிவிக்கிறோம். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவிக்கான பொது மாறுதல் கலந்தாய்வை இந்த மாத இறுதிக்குள் நடத்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பண்ணை ஊழியர்களுடன் மகேந்திர சிங் தோனி – வைரலாகும் புகைப்படம்!!

மேலும், ‘பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2004-2006ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டும். மேலும் பதவி உயர்வு பெரும் ஆசிரியர்களுக்கு கட்டாய நிர்வாகத்திறன் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தற்போது நிலவும் கொரோனா அச்சம் காரணமாக உண்டாகும் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில், மாணவர்களுக்கு மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here