#INDvsENG 2வது டெஸ்ட் – அஸ்வின் அசத்தல் சதம்! இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் இலக்கு!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அஸ்வின் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ரோஹித் ஷர்மாவின் அசத்தலான ஆட்டத்தால் இந்திய அணி 329 ரன்கள் குவித்தது. அதன்பின்பு விளையாடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 134 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. இரண்டாவது இன்னிங்சில் அனைத்து முன்னணி பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் களத்தில் தொடர்ந்து நிலையாக நின்று இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அஸ்வின் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது ஆட்டத்தால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் ஸ்கோர் சற்று அதிகரித்து வருகிறது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் சதம் அடித்து அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது 5வது சதமாகும். இவரது விக்கெட்டை எடுக்க இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

அஷ்வினுக்கு நடராஜன் வைத்த பெயர் – ட்ரெண்ட் ஆக்கும் ரசிகர்கள்!!

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டை கைப்பற்றி அசத்திய அஸ்வின் தற்போது பேட்டிங்கிலும் கலக்கி வருகிறார். இதனால் இவரது ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஸ்வின் 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் லீச் மற்றும் மொயின் அலி அதிகபட்சமாக 4 விக்கெட்களை எடுத்தனர். தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 286 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணிக்கு 482 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இந்த ஸ்கோரை இங்கிலாந்து அணி சேஸ் செய்யுமா என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

லைவ் ஸ்கோர்:

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் – 286

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here