Thursday, May 16, 2024

நாய்களை பராமரிக்க பட்டதாரிகள் தேவை, ரூ. 45 ஆயிரம் சம்பளம் – டெல்லி ஐஐடி அறிவிப்பால் சர்ச்சை!!

Must Read

டெல்லி ஐ.ஐ.டி தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் நாய்களை பராமரிப்பதற்காக பட்டதாரி இளைஞர்கள் வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில் அதற்கு தற்போது டெல்லி ஐ.ஐ.டி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

நாய்களை பராமரிக்க ஆட்கள்:

இந்தியாவில் ஐ.ஐ.டிகளில் படிக்கச் வேண்டும் என்பதும் அங்கு வேலை பார்க்க வேண்டும் என்பதும் பெரும்பாலானவர்களின் கனவு என்று கூட சொல்லலாம். இப்படி இருக்க கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி டெல்லி ஐ.ஐ.டி தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வேலைக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டெல்லி ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள நாய்களை பராமரிக்க ஆட்கள் தேவை என்று தெரிவித்துள்ளது.

கல்வித்தகுதியாக பட்டயப்படிப்பு:

கூடுதலாக இந்த வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் பட்டயபடிப்பான பி.ஏ, பி.டெக், பி.எஸ்சி, முடித்தவராக இருக்க வேண்டும் என்றும், இந்த பணிக்கு 45,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

delhi iit advertisement
delhi iit advertisement

விண்ணப்பிப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலரும் இதற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இது மாணவர்களை அவமானபடுத்தும் செயல் என்று அனைவரும் தெரிவித்தனர்.

டீவீட்டில் விளக்கம்:

டில்லி ஐஐடி இயக்குனர் ராம்கோபால் ராவ் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது “நாய்களை பராமரிப்பதற்காக விளம்பரபடுத்தப்பட்ட செய்தி தவறானது.”

ஒரு வழியாக குறைந்து தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

“அதில் கால்நடை பட்டப்படிப்பு படித்தவர்கள் வேண்டும் என்பதற்கு பதிலாக பி.டெக் போன்ற படிப்புகளையும் சேர்த்துள்ளனர். மனிதர்கள் தவறுகள் செய்வார்கள் தானே. இந்த விவகாரத்தை நாம் விட்டுவிடலாம்.” என்று விளக்கமளித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -