முகம் ஜொலிஜொலிக்க சூப்பரான யோகா டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

0
yoga for glowing face
yoga for glowing face

தினசரி நம் வாழ்க்கையில் யோகா என்பது மிக முக்கியமான ஒன்றாகும். தினசரி யோகா செய்வதால் நமது உடலும் மனமும் லேசாக இருக்கும். மேலும் முகம் பொலிவு பெற நாம் கடைகளில் கிடைக்கும் பல கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துகிறோம். தினமும் நம்மால் அதனை பயன்படுத்த முடியாது. அடிக்கடி பயன்படுத்தினாலும் தோலில் விரைவில் சுருக்கங்கள் ஏற்படும். யோகா மூலம் இதற்கு சிறப்பான பலனை பெறலாம்.

யோகா:

தினமும் நாம் யோகா செய்வது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும். இதனால் மனதும் ஒருநிலைப்படுத்தபடும். ஆனால் நாம் வேலை, வேலை என்று ஓடி கொண்டிருப்பதால் யோகா செய்வதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கி கொள்வதில்லை. ஆனால் நாம் கிடைக்கும் சில நேரங்களில் இந்த யோகா செய்தால் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பிட்ட வயதை அடைந்ததும் நமது முகத்தில் சுருக்கங்கள், வயதான தோற்றம் போன்றவை ஏற்படும்.

Yoga-for-Naturally-Glowing-Skin-and-Face,
Yoga-for-Naturally-Glowing-Skin-and-Face,

இவற்றை தடுத்து முகப்பொலிவை அதிகரிக்கும் சில யோகா பயிற்சிகள் உள்ளன. தினமும் கிடைக்கும் நேரங்களில் இந்த யோகா பயிற்சியை மேற்கொண்டால் முகத்தின் சுருக்கம், பருமனான கன்னம், கருவளையம் போன்றவற்றை தவிர்க்கலாம்.

facial yoga
facial yoga

முகத்தை மீன் போன்று வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது கன்னத்தை சுருக்கி உதடுகளை விரித்துவைத்துக்கொள்ளவும். இது கன்னத்தில் உள்ள சுருக்கங்களை மறைய செய்யும். முகத்தில் தசைகளை இறுக்கமாக வைக்கும்.

facial yoga
facial yoga

அமர்ந்துகொண்டு மேலே பார்த்தபடி முத்தமிடுங்கள். தொடர்ந்து 5 நிமிடங்கள் இதேபோல செய்யுங்க. இதனை ஒரு நாளைக்கு 3 முறை செய்யுங்கள். இதனால் உங்கள் தாடை அழகாகும். மேலும் கன்னத்திலுள்ள ஏலும்புகள் மற்றும் தசைகள் வலுவாகும்.

facial yoga
facial yoga

காற்றை வாயின் உள்ளே இழுத்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த காற்றை இருபக்க கன்னங்களுக்கு மாற்றுங்கள். இவ்வாறு 5 நிமிடங்கள் செய்யவும். இதனால் கன்னத்தில் அதிக பருமன் இருந்தால் குறைந்துவிடும்.

facial yoga
facial yoga

கண்களை சுற்றியுள்ள சுருக்கங்களை நீக்க கண்களை சுழற்றுங்கள். மேலும் கண்களை நன்றாக விரித்து கண்களுக்கு அருகில் உள்ள சதையை அழுத்துங்கள். இவ்வாறு செய்வதால் கண்களில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

facial yoga
facial yoga

கைகளை வைத்து கன்னத்தில் வலப்புறமாக மசாஜ் செய்யுங்கள். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும். மேலும் வாயினை இறுக்கமாக மூடி உதடுகளை உள்ளிழுத்து கண்களை விரிக்கவும். இதனால் தசைகள் வலுப்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here