ஒரு வழியாக குறைந்து தங்கத்தின் விலை – சீக்கிரமா கடைக்கு கிளம்புங்க!!

0

கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் நகைக்கடை பக்கம் செல்லத் தொடங்கி உள்ளனர். விலை குறைந்த காரணத்தால் வியாபாரம் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

இன்றைய விலை:

கொரோனா பாதிப்பு உலக பொருளாதாரத்தில் ஈடு செய்ய முடியாத அளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பல தொழில்துறைகள் முடங்கியதால் மிகப்பெரிய வருமான இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டன. இதற்கிடையில் மக்களை அதிகளவில் பாதிக்கும் ஒரு பிரச்னை ‘விலைவாசி உயர்வு’. கொரோனா ஊரடங்கில் சிறிய பட்ஜெட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருந்தவர்களும் நகை விலையைக் கேட்டு ஆடிப்போய் உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

gold-purchase
gold-purchase

ஆம், அந்த அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்தது. இதற்கு அதன் மீதான முதலீடுகள் அதிகரித்ததே முக்கிய காரணமாகும். இதன் விளைவாக கடந்த மாதத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்தை தாண்டியது. வரலாறு காணாத இந்த விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே அதன் விலை சற்று குறையத் தொடங்கியது.

PUBG தடையால் சோகம் – 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!!

இன்று சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3 குறைந்து ரூ.4,885 க்கும், ஒரு சவரன் 24 ரூபாய் குறைந்து ரூ.39,080 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 69.10 ரூபாயாகவும், ஒரு கிலோ ரூ. 69,100 ஆகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here