Thursday, May 2, 2024

PUBG தடையால் சோகம் – 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!!

Must Read

கடந்த சில நாட்களுக்கு முன் பப்ஜி உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் விரக்தி அடைந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐஐடி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பப்ஜி செயலி தடை:

கடந்த சில மாதங்களுக்கு முன் லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் சீன பொருட்களை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனைடுத்து மத்திய அரசு முதற்கட்டமாக, 45 சீன செயலிகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்தது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

pubg ban
pubg ban

பின், கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர்கள் அதிகமாக விளையாடும் ஆன்லைன் விளையாட்டான “பப்ஜி” உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கருத்தில் கொண்டு இது போன்ற தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன என்று கூறியது மத்திய தொழில்த்துறை அமைச்சகம்.

அனைவரின் விருப்பமான விளையாட்டு:

“பப்ஜி” இந்தியாவில் உள்ள பல இளைஞர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு. 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த விளையாட்டிற்கு அடிமையாக இருந்தனர். இந்த விளையாட்டில் வெற்றி பெற முடிவதில்லை என்ற காரணத்திற்காக பலர் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் உலகளவில் 2வது இடத்தில் இந்தியா!!

இப்படி இருக்க இந்த விளையாட்டை தடை செய்த காரணத்தால் மேற்கு வங்கத்தில் ஐஐடி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தூக்கு மாட்டி தற்கொலை:

மேற்குவங்கத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் உள்ள புர்பா லால்புர் பகுதியை சேர்ந்தவர், பிரிதம் ஹால்டர். 21 வயதான இவர் ஐஐடி மாணவர். பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்ததில் இருந்து இவர் விரக்தியில் இருந்துள்ளார். நேற்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இறந்துள்ளார்.

தகவல் அறிந்து அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் பப்ஜி விளையாட்டை விளையாட முடியாத விரக்தியில் தான் இவ்வாறு செய்துள்ளார் என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார். இந்த விவாகரம் அங்குள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -