கண்தானம் செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – அரசு இணையதளம் தொடக்கம்!!

0
TamilNadu CM
TamilNadu CM

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தன்னுடைய கண்களை தானமாக வழங்குவதற்கு உறுதிமொழி அளித்து கையெழுத்திட்டார். இதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்ட நிலையில், அனைவரும் எளிதாக கண் தானம் செய்ய பதிவு செய்யும் வகையில் அரசு சார்பில் இணையதள முகவரியும் வெளியிடப்பட்டு உள்ளது.

கண்தானம் விழிப்புணர்வு:

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை கண் தான விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக கண் தானம் குறித்து போதிய விழிப்புணர்வு மற்றும் புரிதல் இல்லாத காரணத்தால் பலரது வாழ்க்கை இருண்டுள்ளது. நாடு முழுவதும் இளைஞர்கள், குழந்தைகள் உட்பட 68 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கருவிழி பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். மருத்துவத் துறையில் ஏற்பட்டு உள்ள மகத்தான முன்னேற்றம் காரணமாக, ஒருவர் தானமாக அளிக்கும் கண்கள் மூலம் இத்தகைய பாதிப்புள்ளவர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்ற முடியும்.

நாய்களை பராமரிக்க பட்டதாரிகள் தேவை, ரூ. 45 ஆயிரம் சம்பளம் – டெல்லி ஐஐடி அறிவிப்பால் சர்ச்சை!!

இதனை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் www.hmis.tn.gov.in/eye-donor என்கிற இணையதளம் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. மாநில நல்வாழ்வு குழுமத்தால் இது தயாரிக்கப்பட்டுள்ளது. கண் தானம் செய்ய விரும்புபவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். பெயர், இருப்பிட முகவரி, தொலைபேசி எண், ஈமெயில் ஐடி உள்ளிட்டவற்றை அளித்து பதிவிட்டால், சான்றிதழ் அளிக்கப்படும். இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Certificate for Eye donation
Certificate for Eye donation

முன்னுதாரணமாக தாமே முன்வந்து கண் தானத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் ஒரு வயது முதல் அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாம், அதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் என கோரி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here