“மாணவர்களின் கல்வி திறன் அதிகரிக்கும்” – தேசிய கொள்கை மாநாட்டில் பிரதமர் உரை!!!

0
pm modi addressing
pm modi addressing

ஜனாதிபதி, அனைத்து மாநில ஆளுநர்கள் பங்கேற்ற தேசிய கல்வி கொள்கை 2020 மாநாட்டில் உரையாடிய பிரதமர் மோடி ‘இந்த புதிய கல்வி கொள்கை காரணமாக மாணவர்களின் திறன் மற்றும் அறிவு மேன்படும்’ என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

“தேசிய கல்வி கொள்கை 2020”:

பல வருடங்களாக பின்பற்றபட்டு வரும் கல்வி கொள்கையை மாற்றி புதிதாக “தேசிய கல்வி கொள்கை” அறிமுகப்படுத்தப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சொன்னது போல் தேசிய கல்வி கொள்கை அமைக்க கடந்த 2019 ஆம் ஆண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் உருவாக்கிய “தேசிய கல்வி கொள்கை 2020” அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

conference
conference

ஆனால், இந்த கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து, இன்று கொள்கையை பற்றி விவாதிக்க அனைத்து மாநில ஆளுநர்கள் கலந்துகொள்ளும் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினர். இந்த மாநாடு “உயர்கல்வியில் தேசிய கல்வி கொள்கையின் பங்கு” என்ற தலைப்பில் நடைபெற்றது. மாநில ஆளுநர்கள் மட்டுமின்றி பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வி அமைச்சர்கள், கல்வித்துறை மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் உரை:

இந்த மாநாட்டில் பிரதமர் கூறுகையில் “இந்த புதிய கல்விக்கொள்கை மாணவர்களின் அறிவு திறனையும், செயல்திறனையும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். மாணவர்கள் தேர்வுகளுக்காக விரும்பி படிக்க வேண்டும். அதனை சுமையாக இத்தனை ஆண்டுகளும் கருதியுள்ளனர். கல்வித்துறையில் 100 ஆண்டுகளாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த கல்வி கொள்கை அமையும்.”

கண்தானம் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!!

“இந்த கொள்கையை அமல்படுத்துவது நம் அனைவரின் கூட்டு பொறுப்பு. மாநிலங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. இந்த கொள்கை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதற்கு விளக்கமளிக்கப்படும். இந்த கொள்கையை அமைத்ததில் மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டும் பங்கு இல்லை, கூடுதலாக அனைத்து கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பங்கு உள்ளது. ஆசிரியர்கள் தாராளமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்” என்று தனது உரையில் கூறினார்.

அதே போல் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தனது உரையில் “மாநில ஆளுநர்கள் அனைவருக்கும் இந்த கல்வி கொள்கை குறித்து முடிவெடுப்பதில் பங்கு உள்ளது. தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here