Thursday, May 16, 2024

கைதான அனைத்து தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களும் விடுதலை – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Must Read

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலுக்கு காரணமானவர்கள் எனக்கூறி நமது நாட்டிற்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த தப்லீக் ஜமாஅத் குழுவை மத்திய அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. இவர்கள் அனைவரையும் உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்குமா?? என்று கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா பரவலுக்கு காரணம்:

டெல்லியில் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா, தாய்லாந்து, இலங்கை, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த 2361 தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் இந்திய வந்தனர். அது கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் தீவிரமாக பரவ தொடங்கி இருந்த காலகட்டம் என்பதால் அவர்கள் அனைவரையும்  நோய்ப்பரவலுக்கு காரணமானவர்கள் என்று கூறி உள்துறை அமைச்சகம் 236 பேரை கைது செய்தனர். மேலும் 952 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

‘கமல் நாட்டை ஆள நினைத்தால், ஒரு குடும்பமும் உருப்படாது’ – முதல்வர் பழனிசாமி ஆவேசம்!!

வழக்கு பதிவு செய்தவர்களில் 900 பேர் நீதிமன்ற அனுமதியுடன் தங்களது தாய்நாட்டிற்கு திரும்பி விட்டனர். மேலும் 44 பேர் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருந்த நிலையில் 8 பேரை உரிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஆகஸ்ட் 24 ம் தேதி விடுதலை செய்தது டெல்லி நீதிமன்றம். மேலும் இந்த வழக்கு குறித்து “டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தான் பெருந்தொற்றுக்கு காரணமானவர்கள் என்று கூறி வீணாக அவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர்” என்று மும்பை அவுரங்காபாத் நீதிமன்றம் கூறியுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

36 நபர்கள் மீது உள்ள வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அனைவரையும் விடுதலை செய்தது நீதிமன்றம். கைது செய்யப்பட்ட 36 பேரில் ஒருவர் கூட மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவர்கள் மீது பொய் குற்றச்சாட்டு கூறி கைது செய்ததாக அறிவித்தது. பாதிக்கப்பட்ட தப்லீக் ஜாமாத்தினரிடம் உள்துறை அமைச்சகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள், “தேவை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது மத்திய அரசு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்து உள்ளது” என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விரைவில் ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?? அவரே சொன்ன கருத்து வைரல்!!

இந்தியாவில் நடைபெற்று வரும் IPL தொடரின் 17 வது சீசன் பிளே ஆஃப் சுற்றுகளை எதிர்நோக்கி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஐசிசி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -