‘கமல் நாட்டை ஆள நினைத்தால், ஒரு குடும்பமும் உருப்படாது’ – முதல்வர் பழனிசாமி ஆவேசம்!!

0

அரியலூரில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி 36 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பிலான 39 நிறைவடைந்த பணிகளை துவக்கி வைத்தும் 26 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பிலான 14 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்  மக்களிடையே பேசினார்

 முதல்வர் பேட்டி :

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 129 கோடி ரூபாய் மதிப்பில் 21 ஆயிரத்து 504 பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , அரியலூரில் காய்ச்சல் முகாம்கள் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி  தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்,  வழிகாட்டும் நெறிமுறைகளை  மிக சரியாக பின்பற்றியதால் மட்டுமே மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர், வெளியூரியில் இருந்து வந்தவர்களை  முறையாக கண்டறிந்து பரிசோதனை செய்ததன் மூலம் கொரோனா பரவல் மிகவும் குறைந்துள்ளது , கொரனா பாதித்தவர்களுக்கு தேவையான மாஸ்க், வெண்டிலேட்டர் முதலான அனைத்து கருவிகளும் கைவசம் தயாராக உள்ளன எனவும் தெரிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!


தவறு நடந்தால் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த அரசு செயல் படுகிறது,  6300 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. முன்னரே குடிமராமத்து  பணிகளை சரிவர மேற்கொண்டதால், பருவ மழையினால் கிடைத்த நீரை  அதிக அளவு சேமிக்க முடிந்தது. விவசாயிகளின் குழந்தைகள் நல்ல தரமான கல்வியை பெறுவதற்காக அரசுப்பள்ளிகளின் தரம் அதிக பொருட்செலவில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய அளவில், தமிழக அரசு மட்டுமே  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிக அளவில்  பயிர் காப்பீட்டை பெற்று தந்துள்ளது குறிப்பிட தக்கது என்றும்  கூறினார் .

பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!!

தொடர்ந்து பேசிய அவர், சென்னை ஐஐடி-யில் மாணவர்களும் ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட காரணம் அரசு வழங்கிய நடைமுறைகள் எதுவும் சரிவர பின்பற்றப்படாததே ஆகும்.மதுரையில்  எய்ம்ஸ் பல்நோக்கு  மருத்துவமனை கட்டுவதற்காக நிலம் கையக படுத்தப்பட்டுள்ளது. அரசின் புதிய மருத்துவதிட்டத்தை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே ‘மினி கிளினிக்’ என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

அதை தொடர்ந்து கமலஹாசனின் அரசியல் வருகை குறித்து பேசிய முதல்வர், “கமல் நாட்டை ஆள நினைத்தால் ஒரு குடும்பம் கூட உருப்படாது எனவும் , தனது படங்கள் ,பாடல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்  மூலம் அவர் நாடு மக்களுக்கு சொல்ல வரும் கருத்து என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here