Sunday, May 12, 2024

பைக் விலை அதிகரிப்பு – மஹிந்திரா, ஹீரோ நிறுவனங்கள் அதிரடி முடிவு!!

Must Read

ஜனவரி முதல் வாகனத்தின் விலையை உயர்த்த போவதாக மஹிந்திரா நிறுவனம் கூறியது. இதையடுத்து, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இதனால் பைக் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பைக் விலை உயர்வு

பைக் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். பிடித்த மாடல் பைக் வேண்டும் என்று கடன் வாங்கியாவது வாங்கிவிடுவர். இந்நிலையில் பைக் வாங்க விரும்புவோர் இந்த வருடமே வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அடுத்த வருடம் முதல் விலை அதிகரிக்கப்போகிறது. ஏன் இந்த விலை அதிகரிப்பு? எதற்காக இந்த விலை அதிகரிப்பு? என்று பலரது மனதிலிலும் கேள்வி எழுகிறது. மேலும், கடந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 8.99% அதிகரித்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே செயல்பாட்டு வருவாய் 23.7% அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டை விட அதிகம்.

பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது – இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!!

இந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் 18.22 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனம் 16.91 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் காலாண்டில் வெறும் 5.65 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளது.

பொது முடக்க எதிரொலி:

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஷோரூம்கள் பூட்டப்பட்டிருந்த நிலையில், விற்பனை குறைந்துள்ளதாக கூறியது நிறுவனம். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மக்கள் தற்போது தான் மீண்டு வந்து தொற்று நோயின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் பொருட்டும் இரு சக்கர வாகனங்களை வாங்க நாட தொடங்கியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான மகேந்திரா & மகேந்திரா நிறுவனம்,வாகன விற்பனை விலையினை ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு மாடல்களுக்கு ஏற்றவாறு மாறுபடும். இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் மூலதன பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகும். ஒரு வாகனம் தயாரிப்பதற்கு தேவையான விலைமதிப்பற்ற உலோகங்கள், பிளாஸ்டிக், இரும்பு, அலுமினியம் போன்றவற்றின் விலைகள் உயர்ந்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு டீலர்களுக்கு சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும். மகேந்திர விலை உயர்வு செய்த ஒரு நாளுக்கு பிறகு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் விலையை 1500 வரை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -