2020 ஆம் ஆண்டில் செய்திகளில் அதிக இடம் பிடித்த நபர்கள் – எடப்பாடி பழனிசாமி முதலிடம்!!

0

ஆங்கில நாளிதழ் ஒன்று 2020ல் செய்திகளில் அதிகம் இடம் பிடித்தவர்களை குறித்து கருத்து கணிப்பு ஒன்றை ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் நடத்தியுள்ளது. அதன் முடிவுகளின் அடிப்படையில் முதலாவது இடத்தில் முதல்வரும், இரண்டாவது இடத்தில் ரஜினிகாந்தும் உள்ளனர்.

வருடந்தோறும் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் பிரபல நிறுவனங்கள் அந்த வருடத்தின் பல விஷயங்ககளைப் பற்றி கருத்துக் கணிப்புகளை நடத்தி அதன் முடிவுகளை வெளியிடுவர். அந்த வகையில் பிரபல ஆங்கில நாளிதல் ஒன்று இந்த வருடத்தில் அதிகம் செய்திகளில் இடம்பிடித்தவரை பற்றி கருத்துக் கணிப்பை ஆன்லைன் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் நடத்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மொத்தம் 1,128 பேர் கலந்து கொண்டனர். அதில், 68% பெற்று 835 வாக்குகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல் இடத்தில் உள்ளார். 10.7% பெற்று 132 வாக்குகளுடன் ரஜினிகாந்த் இரண்டாம் இடத்திலும் உள்ளார். 8.8% பெற்று 108 வாக்குகளுடன் மற்றவர்கள் மூன்றாம் இடத்தில் உள்ளனர். 5.3%பெற்று 65 வாக்குகளுடன் கொரோனா வைரஸும், 3.7% பெற்று 45 வாக்குகளுடன் தி,மு.க தலைவர் ஸ்டாலின் நான்காவது இடத்திலும், 2.3 % பெற்று 28 வாக்குகளுடன் கமல் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

‘கமல் நாட்டை ஆள நினைத்தால், ஒரு குடும்பமும் உருப்படாது’!!

எஸ்.எம்.எஸ் முறையில் நடந்த கருத்துக் கணிப்பில் மொத்தம் 621 பேர் கலந்து கொண்டனர். அதில் 33.8% பெற்று 210 வாக்குகள் ரஜினிகாந்த் பெற்றுள்ளார். 30.4% பெற்று 189 வாக்குகளுடன் கொரோனா வைரஸும், 13.7% பெற்று 85 வாக்குகளுடன் முதல்வர் பழனிச்சாமியும், 9% பெற்று ஸ்டாலின் 56 வாக்குகளுடனும், 4% பெற்று 25 வாக்குகளுடன் கமலும், 3.9% பெற்று 24 வாக்குகளுடன் மற்றவர்களும் உள்ளதாக கருத்துக் கணிப்பின் முடிவில் இருந்து தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here