Sunday, May 12, 2024

முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

Must Read

சென்னையில் இன்று முதல் ரயில்களுக்கான பயணசீட்டு முன்பதிவு நடைபெறும் என்றும் ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள் செயல்படும் என்றும் தெற்கு ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பொது முடக்கம்:

கடந்த மார்ச் 24 ஆம் தேதில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த கொரோனா பொது முடக்கம் தற்போது சில தளர்வுகளுடன் அனைத்து துறைகளும் செயல்படலாம் என்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொது போக்குவரத்தான பேருந்துகள் மாவட்டங்களுக்கும் செயல்படலாம் என்று அறிவித்திருந்தது.

மீண்டும் குறைந்த தங்கம் & வெள்ளியின் விலை – இன்றைய நிலவரம்!!

ticket counters
ticket counters

அதேபோல் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் ரயில்கள் செயல்படலாம் என்று மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்கள் செயல்பட இருப்பதால் ரயில்களுக்கான பயணசீட்டு முன்பதிவு சென்னையில் இன்று முதல் துவங்க உள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அதே போல், டிக்கெட் கவுண்டர்களும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்வே சேவைகளும் தொடங்கப்படவுள்ளன.

வழிமுறைகள்:

ரயில்கள் தொடங்க இருப்பதால் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுத்தியுள்ளது, தெற்கு ரயில்வே துறை. கூறப்பட்டுள்ள வழிமுறைகள் என்னவெனில்,

  • மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து தான் வர வேண்டும். தாங்கள் வைத்துள்ள கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
  • மக்களுக்கு கண்டிப்பாக வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
  • நோய் தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டும் தான் ரயில்களுக்குள் அனுமதிக்கபட வேண்டும்.
  • கட்டுப்பாட்டு பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் செயல்படாது.

இது போன்ற வழிமுறைகளை ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படடுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -