Sunday, May 12, 2024

பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா – ரசிகர்கள் அதிர்ச்சி!!

Must Read

பிரபல கால்பந்து வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

கால்பந்து வீரர்:

உலக கால்பந்து விளையாட்டில் அதிகமாக பேசப்பட்டவர், நெய்மர் டா சில்வா சாண்டோஸ் ஜூனியர், சுருக்கமாக நெய்மர். பிரேசில் நாட்டு வீரரான இவர் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து கால்பந்து விளையாட்டு போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். தனது அபாரமான விளையாட்டு திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தனது முதல் விளையாட்டு போட்டியிலேயே “சிறந்த இளம் விளையாட்டாளர்” என்ற விருதினை பெற்றார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

football player neymar
football player neymar

பிரேசில் நாட்டு கால்பந்து அணியில் முக்கியமாக கருதப்பட்ட இவர் பி.எஸ்.ஜி எனப்படும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் என்ற அணிக்காக கால்பந்து போட்டிகளில் விளையாடி வந்தார். ஆனால், கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி கால்பந்து ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது.

ட்விட்டரில் தகவல்:

இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதை பி.எஸ்.ஜி தனது அதிகாரபூர்வ த்விட்டேர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், நெய்மர் தவிர மற்ற மூன்று அணி வீரர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

கூடுதலாக, வீரர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர் என்றும் அணியில் உள்ள மற்ற அனைவருக்கும் கொரோன பரிசோதனை இன்னும் சிறிது நாட்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல டென்னிஸ் வீரர் நோவக் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -