நவம்பர் 1ம் தேதி கொரோனா தடுப்பூசி விநியோகம் – டிரம்ப் அரசாங்கம் தீவிரம்!!

0
corona vaccines
corona vaccines

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நவம்பர் 1ம் தேதி கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு விநியோகிக்க டிரம்ப் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா தடுப்பூசி:

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 62 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 1.89 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டிரம்ப் அரசு முறையாக செயல்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் களம் இறங்கி உள்ளார். இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் இந்த தேர்தலில் கொரோனாவால் ஏற்பட்ட விளைவுகள் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. இதனால் தேர்தல் நடைபெறுவதற்கு முன் கொரோனா தடுப்பூசியை வெளியிட்டு மக்கள் மனதில் இடம்பிடிக்க டிரம்ப் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியா உட்பட 3 நாட்டினர் உள்நுழைய தடை – மலேசியா அரசு அதிரடி!!

இதனால் தடுப்பூசி மீதான மனித பரிசோதனைகளை விரைந்து முடித்து அங்கீகாரம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்க நோய் தடுப்பு மைய தலைவர் எழுதியுள்ள கடிதத்தில், நவம்பர் 1ம் தேதி கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட உள்ளது. அனைத்து மருத்துவமனைகளும், சுகாதார நிறுவனங்களும் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here