7 தலைமுறைக்கும் செழிப்போடு வாழணுமா?? அப்போ இந்த விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்க!!

0
helping tendency
helping tendency

தற்போது உள்ள தலைமுறையினர் சற்று வித்தியாச குணங்களுடனே உள்ளன. எதையும் ஒழுங்காக பின்பற்றுவது கிடையாது. நினைத்த நேரத்தில் வெளியில் செல்வது. கண்டா நேரத்தில் தூங்குவது. மேலும் இதை விட உதவி மனப்பான்மை என்பது பெரிதும் குறைந்துவிட்டது. இப்பொழுது குடும்ப பெண்கள் தனது சந்ததிக்கு எதை முக்கியமாக கற்று தர வேண்டும் என பார்க்கலாம்.

பெண்கள்

இந்த காலத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குழந்தைகளை சரிவர பார்த்துக்கொள்ள முடிவதில்லை. அவர்களுக்கென்று நேரமும் ஒதுக்க முடியவில்லை. ஆனால் ஒரு பெண் தான் குடும்பத்தை வழிநடத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறாள். குழந்தைகளிடத்தில் நாம் என்ன சொல்லி வளர்க்கின்றோமோ அதுவே அவர்களின் பிற்காலத்தில் குணநலன்களாக அமைகிறது. என்னென்ன பழக்கவழக்கங்களை நாம் நம் சந்ததியினருக்கு கற்று தரவேண்டும் என்றும் அதனால் வம்சாவழியாக குடும்பம் தழைக்கும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.

sharing the food to poor
sharing the food to poor
  • காலையில் எழுந்திருக்கும் பொழுது நமது குலதெய்வத்தின் நாமத்தை உச்சரிக்க வேண்டுமாம். இதனை நமது குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும்.
  • விடியற்காலையில் எழும் பழக்கத்தை கண்டிப்பாக கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • காலையில் எழுந்ததும் குளித்து விட்டு மற்ற வேலைகளை பார்க்க வேண்டும்.
  • முக்கியமாக ஏழை எளியவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.
  • நாம் உண்ணும் சாப்பாட்டிற்கு மரியாதையை அளிக்க வேண்டும். சாப்பாட்டை வீணாக்குவது போன்ற செய்கைகளை செய்ய கூடாது. ஏனெனில் சாப்பிட்டிற்கு கூட வழியில்லாமல் இருப்பவர்கள் இன்னும் நம் நாட்டில் உள்ளனர்.
Prayer-Food
Prayer-Food
  • எதாவது நல்ல நாளில் அல்லது விசேஷ நாட்களில் நாம் மட்டும் கொண்டாடுவதை விட ஏழைகளுக்கு முடிந்த வரை கொடுத்து உதவி செய்து வந்தால் நல்லது.
  • நாம் சாப்பிடும் முன் இந்த சாப்பாட்டை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி என கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்க வேண்டும்.
  • பிறந்தநாள் தினங்களில் அனாதை இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு முடிந்தவரை உணவளித்து மகிழுங்கள். இவ்வாறு நாம் செய்து வந்து நம் சந்ததியினருக்கு சொல்லி கொடுத்து வளர்த்தால் நம் 7 தலைமுறைக்கும் குடும்பம் செழிக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here