முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாம் – உச்சநீதிமன்றம் அனுமதி!!

0
supreme court
supreme court

நாடு முழுவதும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் 30க்குள் நடத்தி முடிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டு உள்ள நிலையில், முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் விருப்பப்பட்டால் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

செமஸ்டர் தேர்வுகள்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளினால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில் பல மாநிலங்கள் பல்கலைக்கழக இறுதியாண்டு தவிர பிற ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து உள்ளன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Exams
Exams

இறுதியாண்டு தேர்வுகளையும் ரத்து செய்யக்கோரி கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் யுஜிசி அதற்கு அனுமதி வழங்கவில்லை. இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றால் மட்டுமே பட்டம் வழங்கப்படும் என யுஜிசி உறுதியாக தெரிவித்து இருந்தது. இதனால் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது. தற்போது இதற்கான ஏற்பாடுகளில் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களுடன் தேர்ச்சி – உயர்கல்வித்துறை முடிவு!!

இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில் விருப்பப்பட்டால் பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுகளை நடத்த அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here