Saturday, May 18, 2024

அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி – மக்கள் சோகம்!!

Must Read

ஈரோடு அருகே அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பேருந்து சேவைகள்:

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து செயல்படாமல் இருந்த அரசு பேருந்துகள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டிற்கு வந்தது. மாவட்டக்களுக்குள் மட்டும் பேருந்துகள் செல்லலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் செயல்படலாம் என்றும் ரயில்களும் செயல்படலாம் என்று அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இப்படியாக நிலை இருக்க, நேற்று ஈரோடு மாவட்டம் லக்காபுரம் பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது, அப்போது எதிராக இரு சக்கர வாகனம் ஒன்றும் வந்துள்ளது. ஓட்டுநர் தன்னால் முடிந்தளவு பேருந்தை தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் பேருந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.

சம்பவ இடத்திலேயே பலி:

இந்த விபத்தால் சம்பவ இடத்திலே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பேருந்தின் முன்பக்கம் பயங்கரமாக சேதம் அடைந்துள்ளது. இதனை அங்கிருந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 1ம் தேதி கொரோனா தடுப்பூசி விநியோகம்!!

bus accident
bus accident

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இறந்தவர்களின் உடல்களை பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மின் நுகர்வோர்களே., இனி வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்? TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு பல்வேறு விதமான வசதிகளை மின்வாரியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் புதிய மின் இணைப்புகளை, 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்க...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -