பிக் பாஸ் 4 இல் கலந்துகொள்ளும் காமெடி நடிகர் – யாரு தெரியுமா??

0
bigg boss
bigg boss

2017 இல் ஆரம்பமான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கலந்துகொண்ட பிரபலங்களும் நல்ல பிரபலமடைந்தனர். தற்போது பிக் பாஸ் 4 தொடங்கவுள்ள நிலையில் அதில் பங்கேற்க இருக்கும் பிரபலங்களின் பெயர் கசிந்துள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி 2017 இல் பிரபல சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பானது. முதல் சீசனில் பல பிரச்சனைகள் எழுந்தன. ஓவியா, ஆரவ் காதலில் ஏற்பட்ட சர்ச்சை, பரணி எகிறி குதித்தது, காயத்ரி சக்தியின் ஆளுமை போன்ற பல பிரச்சனைகள் முதல் சீசனில் நடந்தன. இதில் ஓவியா அவரின் குணநலன்களால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால் பாதியிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

bigg-boss-
bigg-boss-

பிக் பாஸ் 2 அவ்வளவாக பிரபலமடையவில்லை. மக்களிடம் பிக் பாஸ் 2 பற்றிய எந்த கருத்தும் இல்லை. ஆனால் பிக் பாஸ் 3 முதல் இரண்டு பகுதிகளை விட நன்கு பிரபலமடைந்தது. சாண்டி மாஸ்டர், தர்ஷன், லொஸ்லியா, முகின், வனிதா என பலர் கலர் கலந்துகொண்டனர். பிக் பாஸ் 4 வது சீசன் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்க இருந்தது.

bigg-boss-tamil
bigg-boss-tamil

ஆனால் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இந்த சீசன் கூடிய விரைவில் வரவுள்ளது. தற்போது அந்த சீசனில் காமெடி நடிகரான அமுதவாணன் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. ஆனால் அதிகாரபூர்வமான தகவல் வெளியாக வில்லை. மேலும் ஷிவானி, ரம்யா பாண்டியன் போன்றோர் கலந்துகொள்ள உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here