கடந்த 3 மாதங்களில் வெளியான மலையாளத் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், முறையாக உரிமை பெற்று குணா பட பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை நீக்க வேண்டும் எனவும், பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.