அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களுடன் தேர்ச்சி – உயர்கல்வித்துறை முடிவு!!

0

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரியர் தேர்வுகள் ரத்து:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை தொடர்ந்து இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர மற்ற பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து இருந்தார். மேலும் அரியர் தேர்வெழுத விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி இருந்த மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் கூறி இருந்தார். இதனால் முந்தைய தேர்வுகள் மற்றும் உள்மதிப்பீடு மதிப்பெண்கள் அடிப்படையில் முடிவுகளை அறிவிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் பல அரியர் மாணவர்கள் முந்தைய தேர்வுகளில் தோல்வி அடைந்து இருப்பதால் அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் அளிப்பதில் சிக்கல்கள் எழும். இதனால் அரியர் தேர்வுகளுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் அளித்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

பப்ஜி (PUBG) உட்பட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி!!

மேலும் கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் அடுத்து வரும் நாட்களில் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here