இந்தியா உட்பட 3 நாட்டினர் உள்நுழைய தடை – மலேசியா அரசு அதிரடி!!

0

மலேசியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு உள்ளன. இது நீண்ட காலமாக மலேசியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், மாணவர்கள், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்களை பாதிக்கும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்து உள்ளார்.

இந்தியர்கள் உள்நுழைய தடை:

மலேசியாவில் அனைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மார்ச் முதல் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் “உலகம் முழுவதும் இன்னும் தீவிரமாக பரவி வருவதால், இந்த ஆண்டு இறுதி வரை தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மலேசியா நடவடிக்கை எடுத்துள்ளது” என்று பிரதமர் முஹைதீன் யாசின் கூறியுள்ளார். அதில் ஒரு நடவடிக்கையாக இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் உள்நுழைய மலேஷியா அரசு தடை விதித்து உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகளை நீக்குவதால் அபாயம் – உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

தென்கிழக்கு ஆசியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றுகள் உள்ள நாடுகளில் பிலிப்பைன்ஸைத் தொடர்ந்து இந்தோனேசியா அடுத்த இடத்தில் உள்ளது. மேலும் இந்தியா 4 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்களை கொண்டு உள்ளது. மலேசியாவின் அரசாங்கம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிக்கும், மேலும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்தால் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தக்கூடும் என்று இஸ்மாயில் கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here