10000 பேருக்கு வேலை – தொழில் வளர்ச்சியை அதிகரிக்க போன் பே புதிய அறிவிப்பு!!

0
Phonepay
Phonepay

கொரோனா காலகட்டத்தில் போன் பே களின் உபயோகம் அதிகரித்ததால் ஒப்பந்த அடிப்படையில் 10000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக போன் பே நிறுவனம் அறிவித்துள்ளது.

போன் பே

2016 ஆம் ஆண்டு நடந்த பணமதிப்பிழப்புக்கு பின் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரிக்கப்பட்டன. தற்போது அனைத்து மக்களிடையே ஸ்மார்ட் போன்கள் உபயோகிப்பதால் பண பரிவர்த்தனை செயலிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். கூகிள் பெ, போன் பெ, பெடிஎம் போன்ற செயலிகள் நன்கு பிரபலமானது. தற்போது கடைகள் மற்றும் உணவகங்களில் பண பரிவர்த்தனை செயலி மூலமே பணத்தை செலுத்துகின்றனர். இதனால் கையில் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் இந்த பணபரிவர்தனை முறையையே அதிகம் பயன்படுத்தினர்.

Phonepay
Phonepay

மேலும் அதிக முதலீட்டை வழங்கி தொழில் வளர்ச்சிக்காக பல வேலைவாய்ப்புகளை இந்த நிறுவனங்கள் வழங்குகின்றனர். அதன் அடிப்படையில் போன் பெ வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடைகள் மற்றும் வணிகர்களுடனான தொழில் ஒப்பந்தத்தில் பணியாற்ற 10000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது இக்குழுவின் 8000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்தியா முழுவதும் 11 மில்லியன் நபர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனை இரட்டிப்பாக்கி தொழிலை மேம்படுத்தும் முயற்சியில் போன் பே இறங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here