மழைக்கு இதமான மாலை நேர ஸ்னாக்ஸ் முட்டை வடை – எப்படி செய்றதுன்னு பாப்போம்!!

0
egg vadai
egg vadai

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வருவதால் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்துக்கள் கிடைக்கின்றன. முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளதால் அது எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கிறது. குழந்தைகள் தினமும் சாப்பாட்டில் முட்டை எடுத்துக்கொண்டால் நல்ல வளர்ச்சி அடைவார்கள். இப்பொழுது முட்டையை வைத்து முட்டை வடை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

egg vadai ingredients
egg vadai ingredients

முட்டை 5

பெரிய வெங்காயம் 2

பச்சை மிளகாய் 2

மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி

மிளகுத்தூள் 1/2 தேக்கரண்டி

இஞ்சி சிறிய துண்டு

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை

முதலில் 4 முட்டைகளை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு அதனை ஒரு பௌலில் துருவவும். அதில் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், துருவிய இஞ்சி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். பிறகு ஒரு முட்டையை அடித்து கலந்துவைத்துள்ள கலவையில் சேர்த்து பிசையவும்.

egg vadai
egg vadai

சப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். பிறகு அதனை தட்டையாக உருட்டி எடுத்து 5 நிமிடம் விட்டுவிடவும். அதன்பின் இதனை வாணலியில் எண்ணெயை சூடாக்கி பொரித்து எடுக்கவும். இப்பொழுது முட்டை வடை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here