கண்கள் வசீகரமடைய சூப்பர் டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

0
eye
eye

முகத்திற்கு அழகு சேர்ப்பதில் அதிக பங்கு நம் கண்களுக்கு தான். நாம் எவ்வளவு அழகாக மேக்கப் செய்தாலும் நம் கண்களில் வசீகரம் இல்லையென்றால் முக அழகையே கெடுத்துவிடும். முகத்தில் கண்களை அழகாக மாற்றுவது எப்படி என பார்க்கலாம்.

கண்கள்

சிலருக்கு கண்கள் பெரிதாக இருக்கும் அதனால் பார்க்கவும் நல்ல வசீகரத்துடன் இருக்கும். ஆனால் சிலருக்கு கண்கள் சிறியதாக இருப்பதால் அவ்வளவு வசீகரமாக இருப்பதில்லை. சிலருக்கு அதிக சோர்வு காரணமாக கண்கள் சோர்வுடன் இருக்கும். அதிக நேரம் மொபைல், டிவி பார்ப்பது போன்றவற்றால் கண்கள் சோர்வடைகின்றனர். உடல் சூடு அதிகம் உள்ளதால் கூட கண்கள் சோர்வடையலாம். கண்கள் பளிச்சென்று வசீகரமாக மாற சில டிப்ஸ் இதோ.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

beautiful eye
beautiful eye
  • முதலில் நாம் கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
  • இரவு தூங்கும் முன் விளகெண்ணெய் ஒரு துளி எடுத்து கண்களை சுற்றி தேய்த்து தூங்க வேண்டும்.
  • வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கண்களில் வைக்கவேண்டும். அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி கண்களில் வைக்க வேண்டும்.
  • ஒரு குறிப்பிட்ட நேரம் வரை கண்கள் ஒரே இடத்தில் இருக்கும்படி பார்க்க வேண்டும். இதனால் கண்ணில் உள்ள அழுக்குகள் கண்ணீர் மூலம் வெளியேறும்.
  • கண்களுக்கு அடிக்கடி பயிற்சி கொடுக்க வேண்டும். அதாவது கண்களை 10 முறை இடவலமாக சுழற்ற வேண்டும். இவ்வாறு 1 நாளைக்கு 3 தடவையாவது செய்ய வேண்டும்.
  • கண்களுக்கு சக்தி தரும் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்லது. உணவில் கருவேப்பிலையை அதிகம் சேர்க்க வேண்டும். அல்லது கருவேப்பிலையை காலையில் பச்சையாக சாப்பிட்டு வர வேண்டும்.
  • கண்களுக்கு மையிட்டால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இதனால் தான் குழந்தைகளுக்கு நாம் மையிடுகிறோம். இந்த வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் கண்கள் நல்ல வசீகரமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here