உலகளவில் 40 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா..?

0

உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகளவில் அமெரிக்கா தான் கொரோனவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

உலக நாடுகளில் கொரோனா:

உலகளவில் இதுவரை 3,917,653 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 270,721 ஆக உள்ளது. மேலும் இதுவரை 1,344,178 பேர் இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 1,292,623 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 76,928 பேர் உயிர் இழந்துள்ளனர். இத்தாலியில் 215,858 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 29,958 பேர் உயிர் இழந்துள்ளனர்.

ஸ்பெயினில் 256,855 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 26,070 பேர் உயிர் இழந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் 174,791 பேர் பாதிக்கப்பட்டும் 25,987 பேர் உயிரிழந்து உள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை 206,715 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 30,615 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா:

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 1886 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்து உள்ளனர். நாடு முழுவதும் 16,540 பேர் கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here