தமிழகத்தில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – சென்னையில் ஒரே நாளில் 4 பேர் பலி..!

0

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆரம்ப காலத்தில் தினமும் 100 பேருக்குள் இருந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக 500 முதல் 800 பேர் வரை பாதிக்கப்படுவதால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 580 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று வரை 37 ஆக இருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று காலை சென்னையில் 4 பேர் உயிரிழந்ததால் 41 ஆக அதிகரித்து உள்ளது. மொத்தம் 52 ஆய்வகங்கள் மூலம் ஒரு நாளில் 14,195 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,547 ஆக அதிகரித்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட் உடன் தொடர்புடையவர்கள் தான் அதிகளவில் கொரோனாவால் நேற்று பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது 3,822 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கொரோனா:

தமிழகத்தில் சென்னை தான் கொரோனா வைரஸின் மையமாக உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2644 ஆக உள்ளது. இன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 56 வயது முதியவர் மற்றும் 80 வயது மூதாட்டி உட்பட 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் சென்னையில் மட்டும் பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here