ஒரே நேரத்தில் 250 பேருடன் குரூப் வீடியோ காலிங் வசதி – மைக்ரோசாப்ட் அசத்தல்..!

0

உலகமே தற்போது கொரோனவால் முடங்கி உள்ள நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி ஊழியர்களுக்கும், படிக்கும் மாணவர்களுக்கும் வீடியோ கானபரென்சிங் மூலம் கலந்துரையாடுவதால் ஜூம் போன்ற ஆப்களின் பயன்பாடு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து உள்ளது.

பாதுகாப்பு இல்லை:

ஜூம் ஆப்பினை பயன்படுத்தி அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் விபரங்கள் திருடப்படுவதாக செய்திகள் வெளியானதால், அதனை பயன்படுத்துவது பாதுகாப்பானது இல்லை என மத்திய அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இருப்பினும் அதன் பயன்பாடு இன்றியமையாததாக மாறி விட்டதால் அதனை தடுக்க முடியவில்லை. சிறந்த வீடியோ காலிங் வசதியுடைய பாதுகாப்பான செயலியை உருவாக்குபவர்க்கு பரிசுத்தொகையும் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் டீம்ஸ்:

மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் வீடியோ காலிங் வசதியான டீம்ஸ் இல் குரூப் கால் வசதியில் கலந்து கொள்வோரின் அதிகபட்ச எண்ணிக்கையை 100ல் இருந்து 250 ஆக அதிகரித்து உள்ளது. இந்த அப்டேட் வரும் வாரங்களில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கூகிள் மீட், ஜூம் போன்ற செயலிகளுக்கு கடும் போட்டியாக மைக்ரோசாப்ட் விளங்கும்.

உலகம் முழுவதும் 7.5 கோடி பேர் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் வசதியில் இந்த அப்டேட் சந்தா செலுத்தி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. மேலும் மீட்டிங்களை ஷெட்யூல் செய்வது, மீட்டிங் ரெக்கார்டிங், போன் கால், ஆடியோ கான்பரன்சிங் போன்ற வசதிகளும் வழங்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here