மஹாராஷ்டிராவில் கொடூரம் – சரக்கு ரயில் மோதி 17 வெளிமாநில தொழிலாளர்கள் பலி..!

0

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சொந்த ஊர்க்கு நடந்து சென்ற தொழிலாளர்கள் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய போது சரக்கு ரயில் எறியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

சிறப்பு ரயில்:

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவால் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்ப அரசு சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இருப்பினும் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக பலர் நடந்தே தங்களது ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அதேபோல் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மஹாராஷ்டிரா அவுரங்காபாத் அருகே ரயில் தண்டவாளத்தை ஒட்டி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

உலகளவில் 40 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா..?

இரவு நேரம் ஆகியதால் தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்திலேயே படுத்து உறங்கி உள்ளனர். அந்த வழித்தடத்தில் அதிகாலை 5.15 மணிக்கு சென்ற சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியது. இந்த கொடூர விபத்தில் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். காயமடைந்தவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் மஹாராஷ்டிரா போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here