இந்தியாவில் கொரோனா பாதிப்பு 700ஐ தாண்டியது ..! பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு..!

1

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது . இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டி உள்ளது.

கட்டுக்கடங்காத கொரோனா..!

உலகின் 195-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது. இதுவரை 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தாக்கம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

புதிதாக சுமார் 88 பேருக்கு அந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 733 ஆக அதிகரித்துள்ளது. இதில் 47 பேர் வெளிநாட்டவர்களாவர். கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here