வங்கிகளில் EMI கட்டத் தேவையில்லை, வட்டி விகிதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி கவர்னரின் அறிவிப்புகள்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே அன்றாட கூலித்தொழிலாளர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் வேலை இல்லாமல் உள்ளனர். எனவே பொதுமக்கள் வங்கிகளில் கட்டவேண்டிய தவணைத்தொகையை மூன்று மாதத்திற்கு கட்டத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவித்து உள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்புகள்:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 700ஐ தாண்டியது ..! பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு..!

  • அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அதன் கடன் தவணைகளை (EMI) மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களுக்கு வசூலிக்காமல் தள்ளிவைக்க வேண்டும்.
  • கொரோனா வைரசால் நாட்டின் ஜிடிபி பெருமளவு பாதிக்கப்படும்.
  • கொரோனாவால் ஏற்படும் விலைவாசி உயர்வு பாதிப்பு போன்ற பாதிப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ரெப்போ வட்டி விகிதம் 0.90% குறைக்கப்பட்டு 4 சதவீதமாக மாற்றப்பட்டு உள்ளதால் வீட்டு மற்றும் வாகன கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
  • தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கி கடன்களின் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது.
  • கொரோனா வைரசால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும்.
  • தொழில்துறையினர் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களின் தவணைத்தொகையை கட்ட 3 மாதகால அவகாசம் வழங்கப்படும்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here