‘கொரோனா தடுப்பு மருந்துகள் நாட்டின் கடைசி மைல் வரை கிடைக்கும்’ – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!!

0
covid vaccine

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் நாட்டின் கடைசி மைல் வரை உள்ள மக்களுக்கு கிடைக்கும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதியளித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இந்த இரு தடுப்பூசிகளும் வருகின்ற 13ம் தேதி முதல் மக்கள் மத்தியில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்தியாவின் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதார துறை அமைச்சர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் கூறியதாவது, ‘ 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை குறித்த கருத்தை மதிப்பாய்வு செய்தோம். பின்னூட்டங்களின் அடிப்படையில் சில மேம்பாடுகளையும் செய்துள்ளோம். நாளை இந்தியாவின் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்படும்.

நடிகர் விஜய் போலீசில் பரபரப்பு புகார் – மக்கள் இயக்க நிர்வாகிகளை வெளியேற்ற கோரிக்கை!!

மஹாராஷ்ட்ரா, கேரளா , சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுத்திருந்தது. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி தடையில்லாமல் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் கடைசி மைல் தூரம் வரை கிடைக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம். தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள் ஏதும் இல்லை என்பதை ஒவ்வொரு மாநிலமும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here