கொரோனா தடுப்பூசி பணிகள் – மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!!

0

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டு வரும் நிலையில் அதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா தடுப்பூசி:

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா அச்சம் காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி வரும் 16ம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படவிருக்கிறது. இது தொடர்பாக இன்று மோடி தமிழக முதல்வர் உட்பட அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரான்சிங்கில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

indian corona vaccine
indian corona vaccine

முதற்கட்டமாக கர்நாடகாவில் தடுப்பூசி போடும் பணியை அவர் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக துவக்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தமது மாநிலங்களில் இதே போல தடுப்பூசி திட்டத்தினை துவக்கவிருக்கும் நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தினை தொடங்கி வைக்கவிருக்கிறார்.

பிக் பாஸில் ரீஎன்ட்ரி கொடுத்த அர்ச்சனா, நிஷா – களைகட்டிய பிக் பாஸ் ப்ரோமோ!!

கொரோனா தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை அல்லது நாளை முதல் அனைத்து மாநிலங்களுக்கும் அவைகளின் தேவைகளுக்கேற்ப அனுப்பிவைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தானது மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு நாடு முழுமைக்கும் அனுப்பி வைக்கபடவிருக்கிறது. இந்த நிறுவனத்திடமிருந்தது முதற்கட்டமாக ஒரு கோடி கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு வாங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here