#INDvsAUS 4 வது டெஸ்ட் – விஹாரி மற்றும் பும்ராஹ் விலகல்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா அணியின் பேட்ஸ்மேன் விஹாரி மற்றும் பந்துவீச்சாளர் பும்ராஹ் விலகியுள்ளனர். விஹாரிக்கு காலில் ஏற்பட்ட காயத்தினால் இவர் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்றும் மற்றொரு வீரர் பும்ராஹ் உடல் நல குறைவால் இவரும் போட்டியில் இருந்து விலகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் முடிந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மற்றும் விஹாரியின் சிறப்பான ஆட்டத்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. போட்டியின் நடுவே விஹாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்தியா அணிக்கு 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரோஹித் அரைசதம் அடித்தார். பின்பு புஜாரா 77 மற்றும் பாண்ட் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் களத்தில் நீடித்திருந்தால் இந்தியா அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. கேப்டன் ரஹானே 4 ரன்களில் வெளியேறினார். இந்நிலையில் களத்தில் அஸ்வின் மற்றும் விஹாரி இருந்தனர். அப்போது அனைவரும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்த்தனர். காரணம் அங்கு வேக புயல் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்றோர் இருந்தனர்.

4 வது போட்டியில் விலகிய விஹாரி மற்றும் பும்ராஹ்:

ஆனால் யாரும் எதிர் பார்க்காத நிலையில் விஹாரி மற்றும் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக விஹாரி உலக தரம் வாய்ந்த டெஸ்ட் போட்டியை வெளிப்படுத்தினர். இவர் முதலில் சந்தித்த 100 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா அணியின் பொறுமையை அருமையாக சோதித்தார். இவர்கள் இருவரின் ஆட்டத்தால் இந்தியா அணி ஆட்டத்தை தோல்வியில் இருந்து மீண்டு ஆட்டத்தை டிரா செய்தது. போட்டியின் நடுவே விஹாரி காலில் காயம் இருந்தது.

கொரோனா தடுப்பூசி பணிகள் – மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!!

இவரை தொடர்ந்து இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராஹ் தனக்கு வயிற்றில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். எனவே விஹாரி மற்றும் பும்ராஹ் காயம் காரணமாக 4 வது போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்தியா அணியின் ஜடேஜா காயம் காரணமாக 4 வது போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வீரர்கள் காயம் காரணமாக தொடர்ந்து விலகி வருவதால் இந்தியா அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here