கெஜ்ரிவால் கைது தொடர்பான மனு விசாரணை., அபராதத்துடன் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

0
டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அண்மையில் கைது செய்தனர். இதையடுத்து அமலாக்கத்துறை கைது மற்றும் காவலுக்கு எதிராக புகார் மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்து இருந்தார். ஆனாலும் அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.
இது ஒரு புறம் இருக்க சிறையில் உள்ள கெஜ்ரிவால் அமைச்சரவை உடன் காணொளியில் கலந்துரையாட அனுமதிக்க கோரிய பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here