சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசிலீக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

0

தமிழகத்தில் 50 சதவீதம் இருக்கைகளுடன் தான் திரையரங்குகள் இயங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது சினிமா டிக்கெட்டின் கட்டணத்தை உயர்ந்த அரசு பரிசீலிக்க மதுரை கிளை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திரையரங்கம்:

தற்போது கொரோனாவில் இருந்து நாம் இன்னும் மீளவில்லை என்பதால் சில தளர்வுகளுடன் நாம் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகிறோம். தற்போது பண்டிகை காலம் என்பதால் திரையரங்கம் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தொடக்கத்தில் 100 சதவீதம் திரையரங்குகளில் இருக்கைகள் இருக்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் இதனை எதிர்த்து மதுரை சேர்ந்த வழக்கறிஞர் போனிபாஸ் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ராஜ்குமார் ஆதித்யன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.சுந்தரேஸ் மற்றும் ஆனந்தி தலைமையில் நடைபெற்றது. முடிவில் நீதிபதிகள் “அரசின் மறு உத்தரவு வரும் வரையில் திரையரங்குகள் 50 சதவீதம் இருக்கை வசதிகளுடன் இயங்க வேண்டும் என்றும் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் கூறியதாவது 10,20,50 என எத்தனை சதவீதம் இருக்கைகளுடன் திரையரங்கத்தை இயக்கினாலும் தூய்மைப்படுத்தும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளவேண்டும். அதற்காக செலவு அதிகமாகும். எனவே கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் தீவிரமடையும் “உருமாறிய கொரோனா” பாதிப்பு – பீதியில் மக்கள்!!

டிக்கெட்டின் கட்டணம் உயர்வு:

ஆனால் தற்போது 100 சதவீதம் இருக்கைக்கு முன்பதிவு முடிந்துவிட்டதால் தற்போது அதனை 50 சதவீதமாக மாற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூறிய நீதிபதிகள்,” 100 சதவீதம் முன்பதிவு மேற்கொண்டாலும் 50 சதவீதம் இருக்கைகளுடன் தான் திரையரங்கம் இயங்க வேண்டும் அதற்கு மாறாக காட்சிகளின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்ளலாம். அப்போது செலவு போன்ற இழப்பை சரிசெய்து கொள்ள முடியும். மேலும் திரையரங்கம் டிக்கெட்டின் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்கவேண்டும் என்று மதுரை கிளை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here