இந்தியாவில் தீவிரமடையும் “உருமாறிய கொரோனா” பாதிப்பு – பீதியில் மக்கள்!!

0

இந்தியாவில் தொடர்ந்து வேகமெடுக்கிறது உருமாறிய கொரோனா எண்ணிக்கை. இங்கிலாந்திலிருந்து வந்த மேலும் 14 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

பரவிவரும் உருமாறிய கொரோனா

இங்கிலாந்தில் சில வாரங்களுக்கு முன்பு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது முந்தய கொரோனா வைரஸை காட்டிலும் 70% வேகமாக பரவக்கூடியது. மேலும் இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இங்கிலாந்திற்கு மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இங்கிலாந்து மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, சிங்கப்பூர், லெபனான் ஆகிய மேற்கத்திய நாடுகளிலும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தற்போது இந்த வைரஸின் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இங்கிலாந்திலிருந்து வந்த மேலும் 14 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகும் நடிகை – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!

இந்தியாவில் இத்தகைய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனி அறையில் வைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here