மாட்டு சாணத்தில் புதியவகை பெயிண்ட் – மத்திய அமைச்சர் அறிமுகம்!!

0

சுற்றுசூழலுக்கு உகந்த மற்றும் விஷத்தன்மையற்ற புதுமையான பெயிண்ட் ஒன்றை நாளை டெல்லியில் மத்திய போக்குவரத்துக்கு துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தவுள்ளார். இந்த பெயிண்ட் மாட்டுச்சாணம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாட்டுச்சாண பெயிண்ட்:

சுற்றுசூழலுக்கு ஏற்ற மற்றும் விஷத்தன்மையற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பெயிண்ட் தான் “காதி இயற்கை வண்ணம்”. இது சுவரில் பூச்சுக்கலவை, பூஞ்சைக்கும், நுண்ணூயிருக்கும் எதிராக செயல்படும் முதல் வர்ண தயாரிப்பாகும். மேலும் இந்த பெயிண்ட் பசுமாடு சாணத்தை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மிக குறைந்த விலையில் வெளியாகும் என்றும், இந்தியா தர நிர்ணய அமைப்பு இந்த பெயிண்டிற்கு சான்று வழங்கியுள்ளது. இந்த பெயிண்ட் 2 விதங்களில் வரும். ஒன்று டிஸ்டம்பர் வர்ணம், மற்றொன்று நெகிழி எமல்சன் வர்ணம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மும்பை தேசிய சோதனை மையம் மற்றும் டெல்லியில் உள்ள ஸ்ரீராம் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கசியாபாத் தேசிய சோதனை மையம் ஆகிய மூன்று ஆய்வக நிறுவனங்களும் இயற்கை முறையில் தயாரான இந்த காதி இயற்கை டிஸ்டெம்பர் மற்றும் எமல்சன் வர்ணங்களை சோதித்து பார்த்தது. முடிவில் காதி எமல்சன் இயற்கை வர்ணம் இந்தியா நிர்ணய அமைப்பின் 15489:2013 சான்றையும் காதி இயற்கை டிஸ்டம்பர் வர்ணத்திற்கு இந்தியா தர நிர்ணய அமைப்பின் 428:2013 சான்றையும் பெற்றுள்ளது.

நிதின் கட்கரி அறிமுகம்:

இந்த பெயிண்ட் பாதரசம், காட்மியம், மற்றும் காரீயம் போன்ற உலோகங்கள் இல்லாத வகையில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இதன் மூலம் உள்நாட்டு தயாரிப்பாளர்கள் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். இதன் மூலம் பலபேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். மேலும் இது மாட்டுச்சாணத்தை கொண்டு தயாரிப்பதால் விவசாயிகள் மற்றும் மாடுகளின் தொழுவத்தின் வருவாயும் அதிகரிக்கும். இதன் மூலம் தொழுவத்தில் இருக்கும் ஓர் விலங்கிற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.30,000 கூடுதலாக வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தை மத்திய போக்குவரத்துக்கு துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அறிமுகம் செய்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here