புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை – 49 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை!!

0

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குசந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. 49 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனையும் நிகழ்ந்தது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச்சந்தை நிலவரம்:

இந்த வாரம் வெளியாகவுள்ள அமெரிக்க புதிய நிதி ஊக்க திட்டங்கள் உலகம் முழுவதும் பண வீக்க வர்த்தகத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் ஆசிய பங்கு சந்தைகள் கடந்த பத்து மாத காலத்திற்கு பிறகு நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. அதன் எதிரொலியாக இந்திய இன்று இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ரஜினி ரசிகர்களின் ஓட்டு பாஜக.,விற்குதான் – மாநில தலைவர் பேச்சால் சர்ச்சை!!

முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்த பங்குச்சந்தை மதிப்பு இந்த வாரம் முழுவதும் இப்படியே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்னணி நிறுவங்களான இன்போசிஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎப்சி, ஐடிசி, ஹெச்சிஎல் ஆகிய நிறுவங்களின் பங்குகள் நல்ல ஏற்றத்தில் இருப்பதாலும் இன்றைய வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்றய வர்த்தக நேரத்தின் துவக்கத்தில், மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 477.70 வாக இருந்ததையடுத்து இந்திய பங்கு சந்தை புதிய உச்சமாக 49,260.21 என்று தொட்டது. தேசிய பங்குசந்தையின் மதிப்பு நிப்டி 126.80 புள்ளிகள் உயர்ந்து 14,474.05 ஆக வர்த்தகமாகியது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here