ரஜினி ரசிகர்களின் ஓட்டு பாஜக.,விற்குதான் – மாநில தலைவர் பேச்சால் சர்ச்சை!!

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பாஜகவின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன், பாஜகவின் அரசியல் தெய்வீகம் மற்றும் தேசியம் கலந்தது. ரஜினியின் ரசிகர்கள் வாக்கு பாஜகவிற்கு தான் என்று கூறியுள்ளார்.

பாஜக ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி, கன்னியாகுமரியில் பாஜகவின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் மற்றும் அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்தும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் பேசப்பட்டது. கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளது. கன்னியாகுமரி இடைத்தேர்தலில் கிடைக்கப்போகும் பாஜகவின் வெற்றி பின்பு தமிழகம் முழுவதும் வெற்றியாக தொடரும்” என்று கூறினார்.

#INDvsAUS சிட்னி டெஸ்ட் – மாமா ஆளுக்கு பத்து பால் ஆடலாம்!! விஹாரிக்கு தமிழில் ஊக்கம் அளித்த அஸ்வின்!!

BJP TN Chief Murugan, Others Attempt to Take Out Vel Yatra, Arrested in Erode

மேலும் பாஜக மகளிரணி சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா எல்லா மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றது. மதுரையில் பாஜக அலுவலகத்தை தாக்கிய அனைவரும் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும் என கூறினார்.

ரஜினி ரசிகர்களின் ஒட்டு

தொடர்ந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்களை விவசாயிகள் பலரும் ஆதரிக்கிறார்கள். ஒவ்வொரு விவசாயிக்கும் மத்திய அரசு வழங்கும் ரூ 6 ஆயிரம் உதவித்தொகையால் தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக கட்சி நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் வீண் தான்”

“நடக்கபோகும் சட்டமன்ற தேர்தலில் கூட திமுக தோல்வியை சந்திக்கும். பாஜகவின் அரசியல் தேசியம் மற்றும் தெய்வீகம் கலந்தது. ரஜினி ரசிகர்களின் அனைத்து வாக்குகளும் பாஜகவிற்கு தான்” என்று பேசினார். இவரது பேசி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here